1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (10:56 IST)

வர்மக்கலை கற்கும் காஜல் அகர்வால்

கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது.



ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தில் வர்ம கலையால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அடித்து வீழ்த்தும் இந்தியன் தாத்தா வேடத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது 
 
இரண்டாம் பாகத்திலும் இந்தியன் தாத்தா தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளனர். கதாநாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கும் வர்ம கலைகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் கட்டளை இட்டுள்ளார். இதற்காக வர்ம கலைகள் தொடர்பான விஷயங்களை காஜல் அகர்வால் கற்று வருகிறார்.
 
வர்ம கலைகள் சம்பந்தமான புத்தகத்தை படிப்பதுபோன்ற படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்தியன்-2 படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது