1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2024 (14:28 IST)

இப்ப யார் உங்ககிட்ட ஆதரவு கேட்டாங்க..? விஜய் அறிக்கையை கிண்டல் செய்த இயக்குனர்..!

Vijay
தமிழக வெற்றிக்‌ கழகத்‌ தலைவர்‌, தளபதி விஜய்‌ இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், தவெக போட்டியிடாது என்றும் தெரிவித்திருந்தார். அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:
 
கழகத்‌ தலைவர்‌ அவர்கள்‌, விரைவில்‌ கழகத்தின்‌ கொள்கைகள்‌, கோட்பாடுகள்‌ மற்றும்‌ செயல்திட்டங்களைத்‌ தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ முதல்‌ மாநில மாநாட்டில்‌ வெளியிட்டு, அதன்‌ தொடர்ச்சியாகக்‌ கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள்‌, தமிழகம்‌ முழுவதும்‌ மக்கள்‌ சந்திப்புப்‌ பயணங்கள்‌ என்று, வரும்‌ 2026ஆம்‌ ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலுக்கான ஆயத்தப்‌ பணிகளை மேற்கொண்டு, தேர்தலில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள்‌ பணியாற்றுவது தான்‌ நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்‌. எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில்‌ நடத்தப்படும்‌ உள்ளாட்சித்‌ தேர்தல்‌ உள்பட எந்தத்‌ தேர்தலிலும்‌ தமிழக வற்றிக்‌ கழகம்‌ போட்டியிடாது என்பதைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.
 
குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம்‌ தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்‌ தொகுதி இடைத்தேர்தலில்‌, தமிழக வெற்றிக்‌ கழகம்‌ போட்டியிடாது என்றும்‌, எந்தக்‌ கட்சிக்கும்‌ ஆதரவு இல்லை என்றும்‌, தமிழக வெற்றிக்‌ கழகத்‌ தலைவர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்‌ பேரில்‌ தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்நிலையில் இந்த அறிக்கைக்கு இயக்குனர் ஆதம் பாவா தனது எக்ஸ் பக்கத்தில், ‘சும்மா தமாஷ் பண்ணாதீங்க தளபதி, இப்ப யார் உங்ககிட்ட ஆதரவு கேட்டாங்க..? என்று கிண்டல் செய்துள்ளார். இயக்குனர்  ஆதம் பாவா சமீபத்தில் வெளியான அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran