ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (15:28 IST)

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Maharaja Movie
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியான நிலையில் இந்த படம் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த படம் வெளியான முதல் நாளே 10 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் 32.6 கோடி ரூபாய் வசூலானதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மூன்று நாட்களில் 32 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதால் இந்த படம் மிக எளிதில் 50 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிடும் என்றும் அதன் பின்னரும் வசூல் பெற்றால் ஆச்சரியமடைவதற்கு இல்லை என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படம் வசூலில் மந்தமாக இருந்த நிலையில் தற்போது அவரது ஐம்பதாவது படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva