வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (13:59 IST)

சொந்த கட்சியையே கழுவி ஊற்றிய திண்டுக்கல் சீனிவாசன் !

அதிமுக ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் உளறல். 

 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சமீபத்திய பேட்டியில், தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 தரக்கூடாது என்று நீதிமன்றத்தில் திமுகவினர் தடை உத்தரவு கேட்டனர். ஆனால் நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதனால் நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது.
 
இதை வாழ்த்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேட்பையில் நெய் வடிக்கிறது என்றால் கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள். 
 
தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள் மேடையில் உளறியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.