1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dindigul srinivisan wrongly mentioned thirukural written by avvaiyar

திருக்குறளை எழுதியது அவ்வையாரா? – அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

Tamilnadu
அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டம் ஒன்றில் திருக்குறள் குறித்து பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அப்போது அவர் திருக்குறளை எழுதியது அவ்வையார் என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது மேடையிலிருந்த மற்றொரு நபர் தவறை சுட்டிக்காட்ட, ’யாரு எழுதுனா என்ன நம்ம கருத்து சரியா இருக்கான்னு பாக்கணும்” என ஒருவழியாய் சமாளித்துக் கொண்டுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
இந்தியாவிலும் தோன்றியது மர்ம மோனோலித்! – மக்கள் அதிர்ச்சி!