புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (16:29 IST)

மீண்டும் பொய் சொல்லி விஜய்யை கடுப்பேற்றும் எஸ் ஏ சி!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தன் பெயரிலேயே கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சி தனது பெயரிலேயே அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக எஸ் ஏ சி அளித்த நேர்காணல் ஒன்றில் ’விஜய்யை சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் போது சந்தித்தேன். அவர் எனக்கு மோதிரம் பரிசளித்தார். ‘எனக் கூறினார்.

இதனால் விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எஸ் ஏ சி சொன்னது போல அவர் விஜய்யை சந்திக்கவே இல்லையாம். ஏனென்றால் அப்போது விஜய் சென்னையிலேயே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ரசிகர்களின் ஓட்டுகளை வாங்க எஸ் ஏ சி அள்ளிப் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.