புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (16:44 IST)

ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் நுழைந்த பாம்பு !!! பெண்கள் அதிர்ச்சி

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே  அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணிக்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம்சுமத்தி விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட அவலிவ நல்லூரில் திமுக சார்பில் நகிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பெண்கள் கூட்டத்தில் லேசாக சப்தம் ஏற்பட்டு பதறினார்கள்.. இதைப்பார்த்த ஸ்டாலின் எதோ ஓணான் வந்துள்ளது என்றார். பிறகு, விஷமில்லாத தண்ணீர்ப் பாம்பு அங்குள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டது.

பின்னர் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.