திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (12:06 IST)

மேல்முறையீடு இல்லை, மக்கள் மன்றத்தை சந்திக்க தினகரன் திட்டமா?

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்பதால் அவர் முன் தற்போது மூன்று ஆப்சன்கள் உள்ளது. ஒன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது, இரண்டு மேல்முறையீடு செய்து இன்னும் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ காலத்தை வீணாக்குவதை விட நேராக மக்கள் மன்றத்தை சந்தித்து ஆர்.கே.நகர் போன்று 20 தொகுதிகளிலும் வெல்வது. மூன்றாவது உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தேர்தலையும் சந்திக்க தயாராகுவது.

இதில் மூன்றாவது ஆப்சனை தினகரன் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே முதல் இரண்டு ஆப்சன்களில் ஒன்றைத்தான் அவர் தேர்வு செய்வார் என்று கணிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலை சந்திக்கும் நிலை இல்லை. கமல் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்பாது. ரஜினி இடைத்தேர்தலுக்குள் கட்சி ஆரம்பிக்க  வாய்ப்பு இல்லை. எனவே மேல்முறையீடு செய்வதைவிட மக்கள் மன்றத்தை சந்திப்பதையே தினகரன் விரும்புவதாக அவரது வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.