புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (11:22 IST)

காலியானது 20 தொகுதிகள் –இடைத்தேர்தல் எப்போது?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார். அதையடுத்து அந்த 18 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியி சத்யநாராயணாவிடம் இந்த வழக்கு சென்றது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், இன்று வழங்கிய தீர்ப்பில் சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை எனக் கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இதனால் அந்த 18 பேரின் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது. அந்த 18 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யலாம். அல்லது தேர்தலை சந்திக்கலாம். அப்படி தேர்தலை சந்திக்க முடிவு செய்தால் ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகள் உள்பட மொத்தன் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள் சூழ்நிலையில் அதற்கு முன்போ அல்லது அந்த தேர்தலோடோ இந்த இடைத்தேர்தல்கள் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.