ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (12:30 IST)

அதிமுகவில் இணையும் அமமுக!!! குண்டை தூக்கிப்போடும் மதுரை ஆதீனம்...

அதிமுகவில் அமமுக இணைய இருப்பதாகவும் அதற்காக சமரச பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
 
அதிமுகவில் இருந்து விலகி அமமுக கட்சியை துவங்கி ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்றவர் தினகரன். முதலில் ஒன்னுமன்னுமாய் இருந்த இரு கட்சிகளும் பின்னர் எலியும் பூனையுமாய் மாறினர். பின்னர் அமமுகவும் அதிமுகவும் இணைய போகிறது என பரவிய செய்திக்கு, பதிலளித்த தினகரன் அது ஒரு போதும் நடக்காது என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் மதுரை ஆதினம் பேசுகையில் பாராளுமன்ற தேர்தலி முன்னிட்டு அதிமுகவில் அமமுக இணைய இருப்பதாகவும் அதற்காக சமரச பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார்.
 
இந்நிலையில் இது சம்மந்தமாக விளக்கமளித்த தினகரன் அது துரோகிகளின் கூட்டம், ஒரு போதும் நான் அதிமுகவில் இணையமாட்டேன். மதுரை ஆதீனம் கூறுவது ஆதாரமற்ற விஷயம் என அவர் பேசினார்.