1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (10:07 IST)

பேரதிர்ச்சியில் அமமுக: திமுகவில் இணைந்த அமமுகவின் வி.பி.கலைராஜன்!!!

பேரதிர்ச்சியில்  அமமுக: திமுகவில் இணைந்த அமமுகவின் வி.பி.கலைராஜன்!!!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
 
தினகரனின் வலது கை போல் செயல்பட்டு வந்த செந்தில்பாலாஜி, திமுகவிற்கு சென்றது அமமுகவின் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் அடைவதற்குள்ளேயே அமமுகவின் இன்னொரு பிரமுகர் விபி கலைராஜனும் திமுகவில் இணைய இருக்கிறார் என செய்தி பரவியது. 
பேரதிர்ச்சியில்  அமமுக: திமுகவில் இணைந்த அமமுகவின் வி.பி.கலைராஜன்!!!
 
இதற்கிடையே நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
 
இந்நிலையில் இன்று  திருச்சியில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த வி.பி.கலைராஜன் தனது ஆதரவை ஸ்டாலினுக்கு தெரிவித்தார்.