1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:53 IST)

டாஸ்மாக்கில் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை - குடிமகன்களுக்கு ரூ.5 லாபம்

தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்கில் பணமில்லா பரிவர்த்தனை விரைவில் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
டாஸ்மாக்கில் வாங்கப்படும் (குவார்ட்டர்) 180 மில்லி பாட்டில்களுக்கு ரூ.5 அதிகமாக எடுத்துக்கொண்டுதான் மீதி சில்லறை கொடுக்கப்படுகிறது. அதுவே 360 மில்லி எனில் ரூ.10ம், ஃபுல் எனப்படும் 750 மில்லி பாட்டில்களுக்கு ரூ.20ம் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது பல வருடமாக நடந்து வருகிறது.
 
ஆனால், சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏறக்குறைய 50 கடைகளுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்தும் ஸவைப்பிங் மிஷின் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால், இதை டாஸ்மாக் விற்பனையாளர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இது பற்றி ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.


 

 
எனவே,  அனைத்து கடைகளிலும் பணமில்லா பரிவர்த்தனையை அமுல்படுத்தவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம், புகார்களும் குறையும், அதேபோல், டாஸ்மாக் கடைகளில் நடத்தப்படும் கொள்ளை சம்பவங்களும் குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.