1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (15:53 IST)

மணிரத்னத்திடம் பயிற்சி பெற்றவர்களால் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது; சித்தார்த்

மணிரத்னத்திடம் பயிற்சி எடுத்த நானும், மலிந்தும் நான்சென்ஸ் படம் எடுக்க முடியாது என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.


 

 
மலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்துள்ள ஹாரர் படம் அவள். இந்த படத்தை பார்த்து நிச்சயம் இந்தியாவே பயப்படும் என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். மேலும் அவள் படம் குறித்து அவர் கூறியதாவது:-
 
ஒரு நல்ல ஹாரர் படம் பார்ப்பது ஸ்பா செல்வது போன்றதாகும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். நானும், மலிந்தும் சேர்ந்து அவள் ஸ்க்ரிப்ட்டை எழுதி முடிக்க 4 ஆண்டுகள் ஆனது. படம் படு மிரட்டலாக இருக்கும். படத்தில் ஒரு ஜோக் கூட கிடையாது. 
 
அவள் உண்மை கதையை மையமாக கொண்டு கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தம்பதியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சிறுமியை பற்றிய கதை. இதை இமாச்சல் பிரதேசத்தில் படமாக்கினோம். 
 
பயப்படுவது கூட போதை போன்றுதான். எனக்கு பயப்பட பிடிக்கும். மணிரத்னத்திடம் பயிற்சி எடுத்த நானும், மலிந்தும் நான்சென்ஸ் படம் எடுக்க முடியாது என்றார்.