1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (18:08 IST)

சசிகலா முதல்வராவது கஷ்டம்; சட்ட சிக்கல் உள்ளது: வழக்கறிஞர் விளக்கம்

சசிகலா முதல்வராவதில் மூன்று விவகாரங்களில் சட்ட ரீதயாக சிக்கல்கள் உள்ளதாக வழக்கறிஞர் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.


 


சசிகலா தமிழகத்தின் முதல்வராவது இந்திய அரசியலமைப்பு படி கடினம் என வழக்கறிஞர் விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு 10வது விதியின் படி நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவையில் அமர்வதற்கு பிரமணம் எடுக்க வேண்டும். அப்படியே முதலமைச்சராக வந்தாலும் 6 மாதகாலம் உறுப்பினர் இல்லாமல் எப்படி அமர முடுயும்.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வரவுள்ளது. இப்படி அவர் மீது உள்ள வழக்குகளாலும் சசிகலாவுக்கு சிக்கல் உள்ளது, என்றார்.

இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள முதலமைச்சருக்கான விதிகளைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.