ராமாவரம் தோட்டத்தில் ரஜினியை வெளுத்தாரா எம்.ஜி.ஆர் ? வெளியான உண்மை!!

Rajinikanth and MGR
Sugapriya Prakash| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:16 IST)
Rajinikanth and MGR

சமூக வலைத்தளத்தில் எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்ததாக பரவும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன்.

கே.பி.ராமகிருஷ்ணன் பல படங்களில் எம்.ஜி.ஆர்-க்கு டூப் போட்டு சண்டை போட்டுள்ளார். படங்களை விட்டு எம்.ஜி.ஆர் அரசியலில் நுழைந்ததும் கே.பி.ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆர்-க்கு மெய்க்காப்பாளராக இருந்தார்.


சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில், 1979 ஆம் ஆண்டு ரஜினியை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து எம்.ஜி.ஆர் அடித்ததாக பரவும் செய்தியை மறுத்துள்ளார். ஒரு போதும் எம்.ஜி.ஆர் ரஜினியை அடிக்கவில்லை.

ஆனால் ஒரு முறை கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்தது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.


சமூக வலைத்தளத்தில் எம்.ஜி.ஆர் ரஜினியை அடித்ததாக பரவும் செய்திக்கு இந்த பேட்டி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன்.


இதில் மேலும் படிக்கவும் :