ராணாவின் மிரட்டல் நடிப்பில் "காடன்' - இணையத்தை அசத்தும் டீசர் இதோ!

papiksha| Last Updated: வியாழன், 13 பிப்ரவரி 2020 (11:11 IST)

காடும் காடு சார்ந்த இடமும் மைய கதையாக கொண்டு மைனா,
கும்கிபடங்களை என மிகசிறந்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். அதையடுத்து கடைசியாக நடிகர் தனுஷை வைத்து தொடரி
படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக தற்போது நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது.
யானை வழித்தடங்களை மூடும் கார்பொரேட்களுக்கும் யானை பாகனுக்கும் இடையேயான போராட்டத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 2-ம் தேதி 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதோ அந்த
டீசர்
.
இதில் மேலும் படிக்கவும் :