தொடர்புடைய செய்திகள்
- 1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
- எழும்பூர் – காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரத்து இல்லை! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக..! – வாழ்க்கையை இழந்த பெண்!
- அடுத்த முதல்வர் விஜய்தான்..! – வேட்புமனு தாக்கல் செய்து ரசிகர்கள் முழக்கம்!
- விலைப்பட்டியல் வைக்கணும், பில் தரணும்..! – டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு!
ஒரு கவுன்சிலர் பதவிக்கு இத்தனை போட்டியா? – தருமபுரியில் பரபரப்பு!
தருமபுரியில் காலியாக உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கு முக்கிய கட்சிகள் உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தின் 18வது வார்டு கவுன்சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். தற்போது 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம் ஏனைய பகுதிகளில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று வரை மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாப்பிரெட்டிப்பட்டி 18வது வார்டில் போட்டியிட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்துள்ளார். இறுதி நாளான நேற்று அதிமுக, திமுக, பாமக, அமமுக, தேமுதிக கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்றும் சில சுயேட்சைகளுமாக மொத்தம் 12 பேர் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
