1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New regulations announced for TASMAC shops

விலைப்பட்டியல் வைக்கணும், பில் தரணும்..! – டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு!

Tamilnadu
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், ரசீது தரவும் மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இதுகுறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்றும், மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அடுத்த முதல்வர் விஜய்தான்..! – வேட்புமனு தாக்கல் செய்து ரசிகர்கள் முழக்கம்!