1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dharmapuri mp senthil kumar latest tweet

பதவி இல்லாமல் இருந்தாலும் பாடுபடுவேன்: தர்மபுரி எம்பி செந்தில் குமார்

தர்மபுரி எம்பி
தர்மபுரி திமுக எம்பி ஆக இருக்கும் செந்தில்குமார் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் பதவி இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவேன் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் மிகச் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் மணி என்பவரை திமுக வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இருப்பினும் அவர் தனது சமூக வலைதளத்தில் திமுக குறித்து பாசிட்டிவ் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் என்பதும் தர்மபுரி திமுக வேட்பாளருக்கு தனது முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்றுமுன் செந்தில்குமார் எம்பி தனது சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

#குறும்பர் சமுதாயம் பழங்குடி பட்டியலில் சேற்கும் வரை  தொடர்ந்து உறுதியாக பதவி இல்லாமலும் பெற்று தருவேன் என

தர்மபுரி மாவட்டம்
#இண்டூர் குப்பு செட்டிபட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்று

அவர்கள் மரியாதை ஏற்று
அவர்களிடம் #உறுதி
அளித்தேன்

உடன் சிவகுமார்

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு சுயேட்சை ஓபிஎஸ்.. வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்பு..!