செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (19:08 IST)

வளர்ப்பு மகளையே பலாத்காரம் செய்து கொன்ற ராணுவ வீரருடன் மனைவியும் கைது

Death
மதுரையில் வளர்ப்பு மகளையே பலாத்காரம் செய்து கொன்ற சம்பவத்தில் ராணுவ வீரருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மதுரை மாவட்டம் கூடல் புதூர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், அவரது தந்தையும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
 
எனவே சிறுமி தனது பாட்டி பெரியப்பா மற்றும் பெரியம்மாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
 
இந்த நிலையில் கடந்த வியாழக்கிமை அன்று கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வராததால், உள்ளே சென்று பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்ததால் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
அதன்பின்னர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரேத பரிசோதனையில்,  அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது   கண்டறியப்பட்டது.  
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியின் பெரியப்பா செந்தில் குமார், அவரது மனைவி சந்திரபாண்டி ஆகிய இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ராணுவ வீரரான செந்தில்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதன் பின்னர் கொலை செய்து சிறுமி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. எனவே செந்தில்குமார் மற்றும் அவரது மனவி சந்திரபண்டி இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.