1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dharmapuri candidate dr senthil kumar not get choice to contest election

தர்மபுரி தொகுதியில் செந்தில் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை..! சர்ச்சை பேச்சுதான் காரணமா?

தர்மபுரி
திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் வேட்பாளர் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி நிலையில் இதில் சிட்டிங் எம்பி ஆன தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுக எம்பி யாக இருக்கும் செந்தில்குமார் அதிரடியாக நாடாளுமன்றத்தில் பேசுபவர் என்பதும்,  மிக அதிகமாக கேள்வி கேட்டவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பதும் அதேபோல் நாடாளுமன்றத்திற்கு அதிக நாள் வருகை தந்தவர் அவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் திமுக நான் போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் தர்மபுரி தொகுதிக்கு ஆ மணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து செந்தில்குமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆதவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பசு மூத்திரம் மாநிலங்கள் என வட மாநிலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செந்தில்குமார் பேசியதுதான் அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜார்கண்ட் ஆளுநர் கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பார்-மத்திய உள்துறை அமைச்சகம்!