1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dharmapuri harassement case: Victim was arrested

நாட்டையே உலுக்கிய பலாத்கார வழக்கு: முக்கிய அயோக்கியன் அதிரடி கைது

தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சதீஸ் என்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரில் தீபாவளிக்காக ஊருக்கு வந்த பிளஸ்2 மாணவியை ரமேஷ் மற்றும் சதீஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். பாலத்கார முயற்சியின் போது மாணவி தப்பிக்க முயன்ற காரணத்திற்காக மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். 
 
தாக்குதலுக்கு பின்னர் பலாத்காரம் செய்ய முயன்ற போது ஆள் வரும் சத்தம் கேட்டதால் மாணவியை அப்படியே விட்டு ஓடிவிட்டனர். மாணவி மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார் அளித்த போதும், கோட்டப்பட்டி போலீஸார் பலாத்கார முயற்சி என்று தான் புகார் பதிவு செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்ய மாணவியிடம் பெற்றோரிடமே 6000 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் குற்றவாளிகள் 48 மணிநேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
இதையடுத்து ஏற்காட்டில் பதுங்கியிருந்த சதீசை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரமேஷை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் மாதிரியான ஆட்களை ரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என மக்கள் கூறி வருகின்றனர்.