செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (08:32 IST)

5 வயது சிறுமியை சீரழித்த 11 வயது சிறுவன்: உபி யில் அதிர்ச்சி

உத்திரபிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருகிறது.
 
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 11 வயது சிறுவன், 5 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அவளை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளான். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11 வயது சிறுவன் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.