வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (11:19 IST)

சிறுவனை வன்கொடுமை செய்து கிணற்றில் வீசிய +2 மாணவன்! – தர்மபுரியை அதிர வைத்த சம்பவம்!

தர்மபுரியில் 10 வயது சிறுவனை +2 மாணவன் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 10 வயது மகன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சமீபத்தில் சாமிக்கு மாலை போட்டிருந்த அந்த சிறுவன் விளையாட சென்று நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் சிறுவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதியமான்கோட்டை போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை ஆராய்ந்ததில் அப்பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சிறுவனை அழைத்து செல்வதும், சில மணி நேரங்கள் கழித்து தனியாக திரும்ப வருவதும் தெரியவந்துள்ளது.


அந்த மாணவனை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சிகரமான சம்பவம் தெரியவந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை ஓரின சேர்க்கை செய்ய விரும்பிய 12ம் வகுப்பு மாணவன், அவனை மாங்காய் பறிக்கலாம் என சொல்லி மாந்தோப்பு பக்கம் அழைத்து சென்றுள்ளான். அங்கு சிறுவனை வன்கொடுமை செய்ததுடன், இதை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளான்.

ஆனால் சிறுவன் அதை தன்னுடைய பெற்றோரிடம் சொல்வேன் என சொன்னதால் அவனை தூக்கி அங்கிருந்த கிணற்றில் வீசி கொன்றுள்ளான். மாணவன் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து அங்கிருந்த கிணற்றில் சோதனை மேற்கொண்ட போலீஸார் சில மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவனுடைய உடலை கண்டெடுத்துள்ளனர். இதுதொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தர்மபுரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K