1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dhanush announced his polytical party in 2031

2031 சட்டசபை தேர்தல்தான் டார்கெட்!.. தனுஷோட பிளானே இதுதான்!..

dhanush
நடிகர் தனுஷ் அவரின் பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் முன்பு பேசியபோது 'நாம் அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும்.. மக்கள் பணியாற்றுங்கள்.. உங்கள் பகுதியில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யுங்கள்' என்றெல்லாம் பேசினார்.

எனவே, விஜயை தொடர்ந்து தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என செய்திகள் வெளியானது. பொதுவாக இது போன்ற செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதுபற்றி விளக்கமளிப்பார்கள். ஆனால் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை என தனுஷ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

எனவே தனுசுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டது
. அதேபோல், செய்தியாளர் சந்திப்பில் ஒரு நிருபர்  ‘எப்போ கட்சி ஆரம்பிக்க போறீங்க?’ என்று கேட்டதற்கு தனுஷ் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். அப்போதும் தனக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் இல்லை என தனுஷ் சொல்லவில்லை.

ஒருபக்கம் தனுஷின் ரசிகர் மன்றங்கள் தற்போது நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு அவை மக்கள் இயக்கமாக மற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ரசிகர் மன்ற தலைவர் சுப்பிரமணிய சிவா ஈடுபட்டிருக்கிறார். 2028 ஆம் வருடம் அரசியல் கட்சியை துவங்கி 2031 சட்டமன்ற தேர்தலில் தனுஷின் அரசியல் கட்சி போட்டியிடும் என சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆர்பிஐ வட்டி உயர்வால் 2-வது நாளாக பங்குச்சந்தை கரடியின் பிடியில்.. ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!