திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (16:49 IST)

வேலை மட்டும் குடுங்க.. செலவை நான் பாத்துக்கறேன்! – ஒலிம்பிக் செல்லும் தனலெட்சுமி கோரிக்கை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தனலெட்சுமி தனது தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்திலிருந்து 5 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதில் தடகள பிரிவில் போட்டியிட திருச்சியை சேர்ந்த தனலெட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல பகுதிகளில் இருந்தும் அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தனலெட்சுமி தான் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்க செல்ல 20 ஆயிரம் வரை செலவு ஆவதாகவும், தமிழக அரசு தனக்கு ஒரு அரசு பணி அளித்தால் தனக்கான செலவுகளை தானே பார்த்துக் கொள்வதாகவும், பல போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.