செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (16:14 IST)

தெலுங்கு சினிமாவில் தனுஷ் !

நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தனுஷ் ஏற்கனவே தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் அவருடைய கால்ஷீட் 2023 ஆம் ஆண்டு வரை நிரம்பி உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது’ தி கிரே மேன் ’என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் அதனை அடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். மேலும் ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஏற்கனவே பல படங்களைக் கையில் வைத்திருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தில் கமிட்டாகக் காரணம் இந்த படத்துக்காக மொத்தமாக தனுஷுக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது படங்கள் தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேரடியாக தெலுங்கு மொழியில் நடிக்கவுள்ளார். இது அவரது தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்துவதற்கு வசதியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபகாலமாக இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் தெலுங்கு சினிமாவில் முகாமிட்டுள்ளனர்.