புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (20:01 IST)

முதல்வருடன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி சந்திப்பு: முன்னாள் அமைச்சர்கள் சிக்குகிறார்களா?

தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் உயர் அதிகாரிகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்ததில் இருந்தே இந்த ஆட்சி நேர்மையான ஆட்சியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர் உறுதி பூண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது
 
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி ஐபிஎஸ் அவர்கள் சற்றுமுன் சந்தித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு டிஜிபி யார் என்பது தொடர்பான கூட்டம் டெல்லியில் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.