செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (15:48 IST)

ஏழை பாட்டியை புகைப்படம் எடுத்தவரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

ஏழை பாட்டியை புகைப்படம் எடுத்தவரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த சில நாட்களாக இரண்டாம் தவணை ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை பெற்ற ஏழை பாட்டி ஒருவரை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு முதல்வர் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருள்கள் சமீபத்தில் ரேஷன் கடையில் வழங்கப்பட்டதை அடுத்து அதனை வாங்க வந்த ஏழை பாட்டி ஒருவர் ஒரு கையில் ரூபாய் 2000 இன்னொரு கையில் 14 வகை மளிகைப் பொருட்களையும் வைத்தவாறு சிரித்து கொண்டு நின்றதை புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்
 
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலானது. கள்ளங்கபடமில்லாத அந்த ஏழை பாட்டியின் பொக்கைவாய் சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புகைப்படத்தை எடுத்தவர் ஜேம்ஸ் ஹேர்பி என்ற புகைப்பட கலைஞர் என தெரிய வந்ததை அடுத்து அவரை நேரில் அழைத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர் எடுத்த புகைப்படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.