1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By மகேந்திரன்
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (12:37 IST)

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறதா திமுக? நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நிர்வாக வசதிக்காக 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் கூட கிராமப்புற பகுதிகளுக்கு நடந்தன. ஆனால் இன்னும் மாநகராட்சி பகுதிகளுக்கு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக திமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டியுள்ளார்.