வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (17:45 IST)

விஜய் – யுவன் சந்திப்பு… பின்னணியில் என்ன?

நேற்று விஜய்யுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்ட யுவன் பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆனால் கடந்த 2003ல் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய்யின் எந்த படத்திற்கும் யுவன் இசையமைக்கவில்லை. இந்நிலையில் நீண்ட காலம் கழித்து இருவரும் சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து விஜய் – யுவன் கூட்டணியில் மீண்டும் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த சந்திப்பு பற்றிய பல பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக யுவன் விஜய்யை சந்திக்க வேண்டும் என சொல்லிவந்த நிலையில் தற்போது ஓய்வாக இருந்த விஜய் அவரை தனனுடைய அலுவலகத்துக்கு வர சொல்லி சந்தித்துள்ளாராம். இந்த சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என்று மட்டுமே சொல்லப்படுகிறது. இருவருமே படத்தில் இணைந்து பணிபுரிவது குறித்து பேசிக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.