1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. devotees allowed in sathuragiri temple

காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால் பக்தர்கள் அனுமதி: சதுரகிரியில் மலையேற குவிந்த பக்தர்கள்...!

sathuragiri
சதுரகிரி மலையில் காட்டுத்தீ இருந்ததை அடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததை அடுத்து  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவதுண்டு 
 
இந்த நிலையில் ஆடி மாத பௌர்ணமியில் அதிக பக்தர்கள் வரும் நிலையில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது முழுவதுமாக காட்டுத்தீ கட்டுக்குள் வந்து விட்டதை அடுத்து மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் பக்தர்கள் மலையேறி வருவதாகவும்  மலையில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தன் பயோபிக் படத்தை வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடிக்க...-சவுக்கு சங்கர் ஓபன் டாக்