1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow thiruvannamalai girivalam day

திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம்.. கிரிவலம் செல்ல சரியான நேரம் என்ன?

Girivalam
திருவண்ணாமலையில் நாளை ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
நாளை அதிகாலை 3. 26 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 1.05 மணி வரை கிரிவலம் செல்ல சரியான நேரம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
மேலும் கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அண்ணாமலை செய்வதைத்தான் நாங்கள் செய்கிறோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.