1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (18:43 IST)

ஒரு காட்டு காட்ட வரிசை கட்டும் காற்றழுத்தம்... ஜனவரி 3 வரை மழைதான்!!

ஜனவரி 3 ஆம் தேதி வரை அடுத்தடுத்து காற்றழுத்தம் உருவாகி தமிழகத்தில் இடைவிடாது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தகவல். 

 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே டிசம்பர் மாதம் 4 காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் 3 காற்றழுத்தங்கள் உருவாகி ஜனவரி மாதம் 24ம் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... 
 
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும், இதனால் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மழை இருக்காது. 
 
இதனைத்தொடர்ந்து டிசம்பர்  7, 8 ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த காற்றழுத்தம் உருவாகும். இது  டிசம்பர்  9 ஆம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து 10, 11, 12 ஆம் தேதிகளில் இலங்கை மற்றும் தமிழகத்துக்கு நெருங்கி தமிழகத்தில் மழை பெய்யும். 
 
இதன் பிறகு டிசம்பர் 15 ஆம் தேதி வரை மழை பெய்யாமல் இருக்கும்.  அடுத்து 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை அடுத்த காற்றழுத்தம் ஏற்பட்டு மழை பெய்யும். 
 
அது முடிந்ததும் டிசம்பர் 26 ஆம் தேதிக்கு பிறகு காற்றழுத்தம் உருவாகி ஜனவரி 3 ஆம் தேதி வரை மழை பெய்யும்.