இன்னைக்கு இல்ல ஆனா... காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த தகவல்!
எதிர்வரும் 29 ஆம் தேதி அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தகவல்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே நேற்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரம் தாமதமாவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் எதிர்வரும் 29ம் தேதி அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 29 ல் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.