செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:41 IST)

மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை..

ராதாபுரம் மறுவாக்கு என்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டார் இன்பதுரை. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  இதனை தொடர்ந்து 203 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகரிகள் நிராகரித்ததாக  அப்பாவு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தேர்தல் அணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், 19,20,21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்குள்  சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று மறுவாக்கு எண்ணிக்கைகாக தபால் ஓட்டு பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து தபால் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, மூன்று சுற்றுக்கான மின்னணு வாக்குகள் எண்ண தொடங்கின. ஆனால் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர் 23 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்பதுரையின் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 23 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.