1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (10:04 IST)

5 நிமிடங்களில் காலியான தீபாவளிக்கான ரயில் டிக்கெட்டுக்கள்: தென்மாவட்ட பயணிகள் அதிர்ச்சி

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ள தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்னரே டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்வதும் உண்டு.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 27ஆம் தேதி வரவுள்ள நிலையில் அக்டோபர் 25ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்கள் இன்று முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால் முன்பதிவு நேரம் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களான நெல்லை, பாண்டியன், வைகை விரைவு ரயில்கள் உள்பட பெரும்பாலான ரயில்களுக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் காலியாகி தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கான முன்பதிவும் நிறைவு பெற்றன. இதனால் தென்மாவட்டங்கள் செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மதுரைக்கு செல்ல ரூ.1035 கட்டணம் கொண்ட தேஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் இடங்கள் அதிகம் உள்ளது. அதேபோல் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஸ்லீப்பர் தவிர மற்ற பிரிவுகளில் ஓரிரண்டு சீட்டுக்கள் உள்ளன.
 
நாளை அக்டோபர் 26ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்படும் என்றாலும் அன்றைய நாளின் டிக்கெட்டுக்களும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் காலியாக அதிக வாய்ப்புகள் உள்ளது