புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (09:23 IST)

வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பிரவசம் பார்த்த மருத்துவர்கள் – குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் !

கோவையில் தனியார் மருத்துவமனையில் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர் பயிற்சி மருத்துவர்கள்.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் .இவரது மனைவி நித்யா. ரங்கராஜின் மனைவி நித்யாவிற்கு பிரசம்வ நேரம் நெருங்கியதை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்திருக்கிறார்.

நித்யாவுக்கு பிரசவ வலி வந்துள்ளது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லாததால் பயிற்சி மருத்துவர்களே பிரசவம் பார்த்துள்ளனர். தங்கள் மூத்த மருத்துவர்களோடு வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் மூலம் பேசி இந்த பிரசவத்தைப் பார்த்துள்ளனர். ஆனால் பிறந்த குழந்தையின் உடல்நிலை இப்போது மோசமாக உள்ளது.

இதற்கு மருத்துவர்களே காரணம் எனக் கூறி ரங்கராஜ் – நித்யா தம்பதியினரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் போலீஸார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.