ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (12:42 IST)

“விடுகதையா இந்த வாழ்க்கை..” – பங்களாவை காலி செய்யுங்கள் சந்திரபாபு

ஆந்திராவின் முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு சட்டத்திற்கு புறம்பாக நதிக்கரையில் கட்டியுள்ள பங்களாவிலிருந்து வெளியேற வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ வழக்கு தொடுத்துள்ளார்.

சமீப காலமாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பல அவமானங்களை சந்தித்து வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து பழைய ஆவணங்களை தூசு தட்டி எழுப்பி சந்திரபாபுவை குடைந்து வருகிறார்.

கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. தெலுங்கானா தனியாக பிரிந்தபோது ஆந்திராவின் நிர்வாகம் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது. அப்போது கிருஷ்ணா நதிக்கரையில் இருந்த ஒரு பங்களாவை சந்திரபாபு நாயுடு குத்தகைக்கு வாங்கி முதலமைச்சரின் அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளார். நாளாக நாளாக அதன் சுற்றுப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு விட்டதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றம் இன்னும் பதிலளிக்காத நிலையில் பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டுமென ராமகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளார்.