வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (21:02 IST)

ஆர்.கே.நகரில் தீபா போட்டி. தாக்குப் பிடிப்பாரா தினகரன்?

ஆர்.கே.நகரில் தீபா போட்டி. தாக்குப் பிடிப்பாரா தினகரன்?
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.



ஜெயலலிதா மரணம் அடைந்த காரணத்தால் காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறிய நிலையில் தற்போது தான் போட்டியிட போவதாக தீபா அறிவித்துள்ளார்.

தீபா போட்டியிட்டால் அவருக்கு ஓபிஎஸ் அணி ஆதரவளிக்கும் என்பதால் டிடிவி தினகரன் கடும் சவால்களை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

தமிழகம் தற்போது துரோகிகளின் பிடியில் உள்ளதாகவும், தமிழகத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்றும் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் தீபா தெரிவித்துள்ளார்.