முக்கிய நபரின் வருகையால் ஃபுல் பவரில் அதிமுக: யார் அந்த முக்கிய நபர்?
அதிமுகவில் எப்பொழுது வேண்டுமானாலும் ஜெ.தீபா இணைந்து கொள்ளலாம் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய ஜெ.வின் அண்னன் மகள் தீபா, அதற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என பெயர் வைத்தார். தொடக்கத்தில் பரபரப்பாக வலம் வந்த தீபா அதன்பின் அமைதியாகிப் போனார்.
சமீபத்தில் பேசிய ஜெ.தீபா, அதிமுகவில் இணைவதற்காக தன் தொண்டர்களுடன் பேசிவருவதாகவும் அதற்கான சூழ்நிலை அமைந்தால், நான் அந்த கட்சியில் இணைய தயார் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள தயார் எனவும், அவர் எந்நேரம் அவர் வேண்டுமானாலும் கட்சியில் இணைந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.