1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Death number increase in Selam cylinder burst

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்து: 6 பேர் பலி!

சேலம்
சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 6 ஆக அதிகரித்துள்ளது. 

 
சேலம் கருங்கல்பட்டியில் தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது. இதனால் சுற்றியிருந்த வீடுகளும் சேர்த்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி என்பவர் உயிரிழந்தார். 
 
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறுமி உட்பட 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த கட்டுரையில்
மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட்-அலர்ட்: வானிலை ஆய்வு மையம்!