திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 மார்ச் 2018 (16:25 IST)

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் உள்பட சுற்றுலாப்பயணிகள் சிக்கி ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மதுரை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் பலியாகியிருப்பதால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு  சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு புரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அப்போது அங்கு தீ விபத்து ஏரற்பட்டது இதனால் 9 பேர் தீயில் கருகி சடலமாக மீடகப்பட்டனர். மேலும், ஐந்து பேர் அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், இன்று மருத்துவ சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவி, சத்யகலா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.