தொடர்புடைய செய்திகள்
- ED தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவால்..! மார்ச் 16-ல் நேரில் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!
- மார்ச் 18 ஆம் தேதி MDS படிப்பிற்கான நீட் தேர்வு!
- தமிழகத்தில் மார்ச் 15,16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
- தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் எதிரொலி: மார்ச் 10ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம்!
- திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்: மார்ச் 1 முதல் அமல்..!
மார்ச் 1-ல் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்!
வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரசாரத்துக்கு தயாராகி வருகிறது.
எனவே தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வரும் மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் அதேதினத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறது திமுக.
இக்கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.
மேலும், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
