புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (20:14 IST)

தயாநிதி மாறனை தோற்கடிப்பாரா வினோத் செல்வம்? மத்திய சென்னை தொகுதி நிலவரம்..!

Vinoj Selvam
பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் மத்திய சென்னையில் வினோத் செல்வம் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சென்னையின் மூன்று தொகுதிகளுமே திமுகவின் கோட்டை என்ற நிலையில் குறிப்பாக மத்திய சென்னையில் தயாநிதி மாறன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

2004, 2009, 2019 என மூன்று முறை தொடர்ச்சியாக தயாநிதி மாறன் வென்றுள்ளார் என்பதும் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டுமே அவர் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி தயாநிதி மாறன் தந்தை முரசொலி மாறன் சொந்த தொகுதி மத்திய சென்னை என்பதும் தயாநிதிமாறனுக்கு கூடுதல் பலம் என்பது குறிப்பிடத்தக்கது. முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் திமுகவின் வலிமையான கூட்டணி, சென்னையின் கோட்டை ஆகியவை அவருக்கு பாசிட்டிவாக உள்ள நிலையில் இந்த தொகுதியின் புதுமுகமாக களமிறங்கியுள்ள வினோத் செல்வம் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்

இருப்பினும் பாஜகவுக்கு தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படும் நிலையில் ஓரளவு கூட்டணி கட்சிகளும் பலமாக இருப்பதால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் தயாநிதிமாறனுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva