மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் : மருமகள் தற்கொலை

thiruthani
Last Modified வியாழன், 16 மே 2019 (14:44 IST)
அரக்கோணம் அடுத்த திருத்தணியில் உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வசிப்பவர் லாரி ஓட்டுநர் முனி கிருஷ்ணன். இவருக்கு யுவராணி என்ற மனைவி இருந்தார். 
லாரி ஓட்டுநராக இருப்பதால் முனிகிருஷ்ணன் இரவு நேரத்தில் வேலைக்குச் சென்றுவிடுவார். இந்நிலையில் இவரது தந்தை டில்லி பாபு  மருமகள் யுவரணியிடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
 
இதுபற்றி யுவராணி பலமுறை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் தந்தை மீது மனைவி வீணாகப் பழிபோடுவதாக கூறியதுடன் அவரை திட்டியதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில்  மாமனார் தன்னை பாலியல் ரீதியாகத் தொல்லை செய்வதாலும், இதுபற்றி கணவரிடம் கூறியதும் தன்னை நம்பாததாலும் மனமுடைந்த யுவராணி தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
 
பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முனி கிருஷ்ணன் மனைவியை தேடியுள்ளார். அதன் பிறகு படுக்கை அறைக்குச் சென்ற போது மனைவி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து யுவராணியின் தற்கொலை செய்ததற்கு டில்லி பாபுதான் காரணம் என்பதை உறுதிசெய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :