1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (20:55 IST)

இளம் பெண்ணை காரில் கடத்த முயன்ற கும்பலால் பரபரப்பு..

நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடிக்கு அருகே உள்ள கேசவன் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது மகள்களுடன் அங்கு வசித்து வருகிறார். மூத்த மகள் பெயர் கலையரசி.
கலையரசி அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். இம்மாதம் கடந்த 6 ஆம் தேதி தனது தோழிகளுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
 
அப்போது அதிவேகத்தில் காரில்  வந்தவர்கள் கலையரசியை கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க கலையரசி ஓடினார். ஆனால் துரத்தி வந்தவர்கள் அவரை இழுத்துக்கொண்டு சென்றனர். 
 
அந்த நேரத்தில்  ஒரு பேருந்து வந்ததால் அவரை அங்கேயே விட்டுவிட்டு காரில் வந்தவர்கள் சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த கலையரசியை  உடனடியாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் மருத்துவரின் சிகிச்சை பலனிக்காமல் அவர் உயிரிழந்தார்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.