1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (14:22 IST)

எயிட்ஸ் நோயாளிப் பெண்ணை கற்பழித்த கொடூரன்

மும்மையில் உள்ள பிரபல லோகமான்ய திலக் முனிசிபல் மருத்துவமனையில் ஒரு பெண் சிறுநீர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அவரது சகோதரியும் அங்கு தங்கி இருந்தார்.
அப்போது இந்தப் பெண் அமர்ந்திருக்கும் வார்டுக்கு வந்த ஒருவன்,சகோதரி வெளியே சென்றிருந்ததால் நோயாளிப் பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார். வந்திருக்கும் நபரை  வார்டுபாய் என்று நினைத்துக்கொண்ட அப்பெண் அவரிடம் பேசிலானார்.
 
பின்னர் தான் ஒரு எச்.ஐ.வி நோயாளி என்று அந்தப் பெண் சொல்லியுள்ளார். அதற்கு அந்நபர் தாம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை மருத்துவமனையின் மேல் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
 
தான் ஒரு நோயாளி என்று தெரிவித்தும் கூட அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கெடுத்துள்ளார் அந்த நபர். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் சியான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 
இதனையடுத்து குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸார் அவனை கைது செய்து அவருக்கு நோய் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் அந்த மருத்துவமனையில் சிசிடிவி கேமரா, மற்றும் செக்யூரிட்டிகளின் பாதுகாவலையும் மீறி இந்தக் நோயாளிப் பெண்ணுக்கு இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.