1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash

சிலிண்டர் மானியம் ரத்து?

கொரோனா காரணமாக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்  சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல். 

 
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே கொரோனா காரணமாக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால்  சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அரசு தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
உண்மையில் சமையல் சிலிண்டர் மானியம் உயர்த்தப்படவில்லை. ஆனால், விலையேற்றம் போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட மானியம் ரத்து செய்யப்பட்டது போன்ற சூழலே இப்போது இருக்கிறது.