புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:07 IST)

மழை வெள்ளம் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

மழை வெள்ளம் குறித்து வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் மழை வெள்ளம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் புகைப்படங்களை பதிவு செய்து தற்போது வெள்ளம் ஏற்பட்டது போல் தவறான தகவல்களை ஒரு சிலர் பரப்பி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மழைவெள்ளம் குறித்து தவறான தகவல் பரப்பிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது